அவோகி – ஹாவ் மார்ட் விவகாரத்தில் இழப்பீடு கோரி வழக்கு..!!

அவோகி – ஹாவ் மார்ட் விவகாரத்தில் இழப்பீடு கோரி வழக்கு..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள டேஸ்ட் ஆர்ச்சர்ட் ஷாப்பிங் மால் தொடர்பான குத்தகை விவகாரம், அவோகி (OG) மற்றும் ஹாவ் சூப்பர் மார்க்கெட் இடையிலான சட்டப் போராட்டமாக தொடர்ந்து நீடிக்கிறது.

ஹாவ் சூப்பர் மார்க்கெட் மற்றும் அதன் நிறுவனர் டாக்டர் டான் கிம் யோங், அவோகி மற்றும் தொடர்புடைய ஒருவரால் தங்கள் வணிகத்தை சேதப்படுத்த சதி செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி,S$ 57.5 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த சர்ச்சை, 160 ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள சில்லறை விற்பனை இடத்திற்கான குத்தகை ஒப்பந்தத்தை மையமாகக் கொண்டது. முன்பு OG பல்பொருள் அங்காடியாக இருந்த இந்த இடம், பின்னர் டேஸ்ட் ஆர்ச்சர்ட் என பெயர் மாற்றப்பட்டது.

குத்தகை ஒப்பந்த திருத்தங்கள், வாடகை செலுத்தாதது, அடமானமாக வைக்கப்பட்ட சொத்துகள் மற்றும் நிதி ஏற்பாடுகள் தொடர்பாக இரு தரப்பும் ஒருவர்மேல் ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

ஹாவ் மார்ட் தரப்பு, வாய்மொழி உடன்பாடு மீறப்பட்டதாகவும், அடமானத்தை மீட்டெடுக்க தடைகள் விதிக்கப்பட்டதாகவும் கூறுகிறது. இதே நேரம், அவோகி தரப்பு வாடகை நிலுவை காரணமாக ஒப்பந்தம் மீறப்பட்டதாக வாதிடுகிறது.

இந்த வழக்கில், சொத்து கைப்பற்றலைத் தடுக்க நீதிமன்ற உத்தரவு, அடமான உரிமை உறுதிப்படுத்தல் மற்றும் நஷ்டஈடு உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK