பரபரப்பு..!! பொங்கோலில் தென்பட்ட நாகப்பாம்பு..!!

பரபரப்பு..!! பொங்கோலில் தென்பட்ட நாகப்பாம்பு..!!

சிங்கப்பூர்:பொங்கோல் பகுதியில் கருப்பு நிற நாகப்பாம்பு ஒன்று காணப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.அந்த நாகப்பாம்பின் வீடியோவை இணையவாசி ஒருவர் பதிவு செய்து பகிர்ந்துள்ளார்.

சனிக்கிழமை (17.01.26) சிங்கப்பூர் வனவிலங்கு பார்வை என்ற பேஸ்புக் பக்கத்தில், சன் ஜுன்சியாங் என்ற நெட்டிசன் இந்த வீடியோவை பதிவேற்றினார். அந்தக் காணொளியில், மைனா பறவையின் தொந்தரவு காரணமாக நாகப்பாம்பு தலையை உயர்த்தும் காட்சி பதிவாகியுள்ளது.

இது குறித்து விலங்குகள் நல ஆராய்ச்சி மற்றும் பராமரிப்பு அமைப்பான ACRES,இது ஒரு விஷமுள்ள இனம் என்றும், சிங்கப்பூர் முழுவதும் பொதுவாகக் காணப்படும் பாம்பு வகை என்றும் கூறியது.

இந்த வகை நாகப்பாம்புகள் பொதுவாக பகல் நேரங்களில், குறிப்பாக காலை வேளைகளில் உணவு தேடி சுறுசுறுப்பாக இருக்கும் என்றும், இயற்கையிலேயே கூச்ச சுபாவம் கொண்டவை என்றும், மனிதர்களைச் சந்தித்தால் பெரும்பாலும் தவிர்த்துச் செல்லும் என்றும் ACRES தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இவ்வகை பாம்புகளைப் பார்த்தால் அவற்றை சீண்டவோ அருகில் செல்லவோ கூடாது என்றும்,குறைந்தது மூன்று மீட்டர் தொலைவில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

உதவி அல்லது ஆலோசனை தேவையெனில், பொதுமக்கள் எந்த நேரத்திலும் ACRES ஹாட்லைன் 9783 7782 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.