சிங்கப்பூரின் மேற்கு பகுதியில் கருகிய வாடை அடிப்பதாக பலரால் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜுரோங்,பூன் லே,கிளமெண்டி,தேபான் கார்டன்ஸ் போன்ற இடங்களில் ரசாயனங்கள் எரிவது போன்ற வாசனை அடிக்கடி வருவதாக புகார் எழுந்துள்ளது!அங்குள்ள தொழிற்சாலைகள் தொழிற்பேட்டைகள் மீது சோதனை நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படுவதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு மற்றும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையும் கூறியுள்ளது.
ஆனால் தற்போதைய நிலவரப்படி காற்றின் தரம் சீரான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது ஆபத்து விளைவிக்கும் பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
கருகிய வாடை ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராயவும் நிலவரத்தை கண்காணிக்கவும் தேசிய சுற்றுப்புற அமைப்பும் குடிமை தற்காப்பு படையும் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்று தெரிவித்துள்ளன.