பீஷான் MRT டிப்போ..!!ரயில் பராமரிப்பில் புதிய புரட்சி..!!

பீஷான் MRT டிப்போ..!!ரயில் பராமரிப்பில் புதிய புரட்சி..!!

சிங்கப்பூர்:பீஷான் MRT டிப்போ பெரிய அளவிலான மேம்படுத்தலுக்குப் பிறகு,ரயில் பராமரிப்பு திறன் இரட்டிப்பாகியுள்ளது. இதனால் மாதத்திற்கு இரண்டு ரயில்களிலிருந்து நான்கு ரயில்களாக அதிகரித்துள்ளது. மேலும் பராமரிப்பு நேரம் பாதியாகக் குறைந்துள்ளது.இதனால் மனிதவளம் சுமார் 30% மிச்சப்படுத்தப்படும்.

புதிய ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள், பாதை வழிகாட்டும் வாகனங்கள் மற்றும் தானியங்கி டர்ன்டேபிள்கள் ஆகியவை ஊழியர்களின் சுமையைக் குறைத்து, பணியை துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் ஆக்கியுள்ளன.

SMRT இன் “டிப்போ 4.0” திட்டத்தின் கீழ், பீஷான் டிப்போ அனைத்து ரயில் பராமரிப்புகளுக்கும் முக்கிய மையமாக மாறும்.துவாஸ் மேற்கு டிப்போ தடுப்பு மற்றும் சரிசெய்தல் பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும்.அதே நேரத்தில் ரயில் பாகங்களை வெவ்வேறு டிப்போக்களுக்கு கொண்டு செல்வதற்கான நேரத்தையும் குறைக்கும்.

டெங்யூ டெக்னாலஜி நிர்வாக இயக்குனர் ஜாங் ஜுண்டே கூறுகையில்,“பராமரிப்பு செயல்முறைகளை எளிதாக்கி,தரம் மற்றும் திறனைக் கூட்ட வாகனத் தொழிற்சாலை 4.0 கருத்தை இணைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேம்படுத்தப்பட்ட டிப்போவை தற்காலிக போக்குவரத்து அமைச்சர் சியூ சின் சியாங் இன்று (21.11.25) திறந்து வைத்தார்.SMRT மேலும் “Kaizen Centre” எனும் புதிய மையத்தையும் திறந்துள்ளது.இது 2018 முதல் மேற்கொண்ட பணித்திறன் மேம்பாட்டு திட்டங்களை வெளிப்படுத்தும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK