ஆர்ச்சர்ட் சாலையில் நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!!!

ஆர்ச்சர்ட் சாலையில் நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (05.02.26) இரவு ஆர்ச்சர்ட் சாலை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவத்தின் போது பலத்த இடி போன்ற சத்தம் கேட்டதாக சில இணைய பயனர்கள் தெரிவித்தனர். மேலும், கடுமையான எரியும் வாசனை சுற்றுவட்டாரத்தில் பரவியதாகவும் கூறப்படுகிறது.

Xiaohongshu சமூக ஊடக தளத்தில் பகிரப்பட்ட காணொளிகளில், சம்பவ இடத்தில் குறைந்தது மூன்று தீயணைப்பு வாகனங்களும், இரண்டு போலீஸ் கார்களும் நிறுத்தப்பட்டிருந்ததை காண முடிகிறது. பல குடிமைத் தற்காப்புப் பணியாளர்கள் ஒரு வாகனத்தைச் சுற்றி தீ அணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அருகிலிருந்த இணையவாசிகள் தூரத்திலிருந்து காட்சிகளை பதிவு செய்துள்ளனர். அவற்றில், அடர்த்தியான புகை வானில் பரவியதை தெளிவாகக் காண முடிகிறது. சம்பவம் நடந்த பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.

இது தொடர்பாக இன்று (06.02.26)பதிலளித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF), நேற்று இரவு சுமார் 10.40 மணியளவில் கிளேமோர் டிரைவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும்,இந்த தீ விபத்தில் ஒரு கார் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

தீயை அணைக்க அதிகாரிகள் தண்ணீர் பீரங்கிகள் மற்றும் தீயணைப்பு போர்வைகளைப் பயன்படுத்தியதாக தெரிவித்தது.அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK