சிங்கப்பூரில் ஆம்புலன்ஸ் சேவைகள் பாதிப்பு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் ஆம்புலன்ஸ் சேவைகள் பாதிப்பு..!! காரணம் என்ன..??

அதிகரித்து வரும் எண்ணெய் விலை உயர்வால் சிங்கப்பூரில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்களின் சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

எண்ணெய் விலை உயர்வால் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்து உள்ளது எனவும் சேவைகள் பாதிக்கப்பட்ட உள்ளது எனவும் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள். தெரிவித்துள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் சுகாதார அமைச்சகத்தின் உரிமத்தை பெற்றவை. அவசரமான மற்றும் அவசரம் இல்லாத மருத்துவப் போக்குவரத்து சேவைகளையும், பராமரிப்பையும் அந்த தனியார் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றன.

மருத்துவமனைகளுக்கும் மருத்துவ நிலையங்களுக்கும் மூத்தோரையும் நடப்பதற்கு சிரமப்படுபவர்களையும் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் கொண்டு செல்கின்றன. சிகிச்சைகளுக்காகவும், பரிசோதனைகளுக்காகவும் மலேசியா வரை சில ஆம்புலன்ஸ் சேவைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பிப்ரவரி மாத இறுதியில் டீசல் விலை $70 காசு அதிகரித்து $4.50 என்ற விலையானது.

இதனால் சில தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் சேவைகளின் கட்டணத்தையும் தற்போது உயர்த்தி உள்ளன. கடந்த மாதம் 1ம் தேதியிலிருந்து லெண்டோர் ஒ ஆம்புலன்ஸ் நிறுவனம் அனைத்து முன்பதிவுகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்திருந்தது.

மற்ற சில தனியார் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் எரிபொருள் விலை உயர்வைப் பயனாளர்கள் மீது சுமத்த போவதில்லை என்று குறிப்பிட்டன. ஆனால் அதிகரித்து வரும் எண்ணெய் விலை உயர்வால் கூடிய விரைவில் கட்டணங்களை வேறு வழியின்றி உயர்த்த நேரிடும் எனவும் அந்த நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

ஃபர்ஸ்ட் ஆம்புலன்ஸ் அதன் ஒட்டுமொத்த செலவினங்கள் பிப்ரவரி இறுதியில் 15ஆம் தேதியிலிருந்து 20% வரை அதிகரித்ததாக கூறியுள்ளது. ஒவ்வொரு ஆம்புலன்ஸ் முன்பதிவுக்கும் $7 இல் இருந்து $15 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதிகரிக்கும் எண்ணெய் விலையை சமாளிக்க அரசாங்கத்தின் ஆதரவு உதவும் என்று தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ராயல் ஆம்புலன்ஸ் நிறுவனம் $5 இல் இருந்து $10 வரை தனது கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK