காது கேளாத வாய் பேச முடியாத நபர் மீது நடந்த தாக்குதல்..!! என்ன நடந்தது..??
சிங்கப்பூர்: டல்விச் கல்லூரியின் லிஃப்டில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத துணை ஊழியர் மீது துப்புரவுப் பொருட்கள் கலந்த தண்ணீரை வீசி காயம் ஏற்படுத்தியதாக 36 வயதான ப்ரியா ராமசந்திரன் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்றது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு கண் கார்னியாவில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதிவாதி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. சாட்சியர்கள் சம்பவத்தை நேரில் கண்டதாகவும், பாதிக்கப்பட்டவர் திடீரென உணர்ச்சிவசப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த ஆண்டு ஜனவரியிலும் பிரதிவாதி பாதிக்கப்பட்டவரை கழுத்திலும் தோளிலும் பிடித்து இழுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.