சிங்கப்பூரில் நடந்த சுவாரசிய சம்பவம்..!! Scam-னு நினைச்சா நிஜமாவே $30,000 பரிசா??

சிங்கப்பூரில் நடந்த சுவாரசிய சம்பவம்..!! Scam-னு நினைச்சா நிஜமாவே $30,000 பரிசா??

சிங்கப்பூரைச் சேர்ந்த 41 வயது சித்தி ஹஜார் ரம்லி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது அறிமுகம் இல்லாத நம்பரில் இருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் அவர் $30,000 வென்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சமீபகாலமாக மோசடி அழைப்புகள் அதிகமாக வந்திருந்த சூழலில் இதுவும் ஒரு ஏமாற்று வேலையாக இருக்கலாம் என நினைத்து அவர் கோபமடைந்துள்ளார்.

உடனே அவர் வந்த அழைப்பை துண்டிக்காமல் அந்த தொலைபேசி எண் யாருடையது என கூகுளில் தேடி உள்ளார். அது ‘ஷெங் சியோங்’ நிறுவன தலைமையகத்தின் அதிகாரப்பூர்வ எண் என்பதை அவர் உறுதி செய்துள்ளார். அதன் பின்னர் ஊழியர்கள் அவருடைய முகவரி மற்றும் அடையாள அட்டை விவரங்களை சரிபார்த்து அவருக்கு கிடைத்த பரிசு உறுதிப்படுத்தி உள்ளனர்.

இந்த அதிர்ஷ்ட பரிசு கிடைக்க காரணம்?
சித்தி ஹஜார் 2017 முதல் வீட்டில் சமைத்து விற்கும் தொழில் செய்து வருகிறார். இதற்கான அவசர பொருட்களை புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள ‘ஷெங் சியோங் ஜங்ஷன் 10’ கிளையிலேயே வாங்குவார்.

அவ்வப்போது அதிர்ஷ்ட குலுக்கல் படிவத்தை சமர்ப்பித்த போது அவர் குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு அவருடைய மகள் அவரிடம் கூறியிருந்தார்.

இறுதியில் அந்த அதிர்ஷ்ட பரிசானது உண்மை என தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணிற்கு ‘ஹரிராயா பெருநாள் அதிர்ஷ்ட குலுக்களில்’ இரண்டாவது பரிசான $30,000 வென்றுள்ளார்.

தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரியும் அவரது கணவரின் மீது சுமையை குறைப்பதற்காகவும் குடும்ப சேமிப்பிற்காகவும் இந்த பணம் பயன்படுத்தப்படும் என கூறியுள்ளார். மேலும் டவுன் சின்ட்ரோம் குறைபாடுடன் பிறந்து தொடர் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படும் அவரது மூத்த பிள்ளையின் செலவுகளுக்கு இந்த பரிசு பெறும் உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK