அங் மோ கியோ மற்றும் ஜாலான் கயு – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்..!!

சிங்கப்பூர்:அங் மோ கியோ மற்றும் ஜாலான் கயு நகராட்சிகள் இன்று (02.11.25) தங்கள் வருடாந்திர மரம் நடும் விழாவை கொண்டாடின.
சிங்கப்பூரின் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மூத்த அமைச்சர் லீ சியென் லூங், அங் மோ கியோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கோபுங் பாரு,யியோ சூ காங் மற்றும் ஜாலான் கயு உறுப்பினர்கள் இணைந்து 60 மரங்களையும்,புதர்களையும் நட்டனர்.
இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக,அங் மோ கியோ நகர சபை 10,000 மரங்கள் மற்றும் புதர்களை நடும் இலக்கை எட்டியுள்ளது.
“இது பசுமையான,ஆரோக்கியமான, வாழக்கூடிய சமூகத்தை உருவாக்கும் குடியிருப்பாளர்களின் உறுதியை வெளிப்படுத்துகிறது,” என்று நகர சபைத் தலைவர் குவோ சியான்சுவான் கூறினார்.
ஜாலான் கயு நகர சபைத் தலைவர் இங் சீ மெங் கூறுகையில், “அங் மோ கியோ குடும்பத்தின் புதிய உறுப்பினராக,இந்த மைல்கல்லை ஒன்றாகக் கொண்டாடுவதில் பெருமை கொள்கிறோம்.மேலும் ஒரு சிறந்த எதிர்காலத்தை வருங்கால சந்ததியினருக்கு உருவாக்குவதில் தொடர்ந்து உறுதியாக இருப்போம்,” என்றார்.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
