சிங்கப்பூர்: நாடாளுமன்ற நாயகர் நியமித்ததற்கு அவையின் தலைவரான இந்திராணி ராஜா அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நாயகர் ஆன திரு சியா கியன் பெங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அவைத்தலைவர் கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட உலக அரசியல் கட்டமைப்பு மாறி வருவதை அவைத்தலைவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த முடிவின் மூலமாக பாதையானது அமைதியையும் நிலைத்தன்மையையும் கொண்டு வந்ததாக இந்திராணி கூறினார்.
புதிய ஒழுங்கு பாதை இன்னும் சரிவர ஒழுங்கமைக்கப்படவில்லை. எனவே உலகத்தில் இன்னும் மாற்ற வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அதை புரிந்து கொண்ட திரு சியா நியாயமாக விவாகரங்களை வழி நடத்துவார் என நம்பிக்கை வைத்துள்ளதாக இந்திராணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த பின்னணியில் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்றி கொள்கைகளை விவாதிக்கும்.
சிங்கப்பூரின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடிவுகளை எடுக்கும் எனவும் அவைத்தலைவரான இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.