சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிலையம்..!! nvidia நிறுவனம் அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிலையம்..!! nvidia நிறுவனம் அறிவிப்பு..!!

சிங்கப்பூர்: என்விடியா(nvidia) நிறுவனம் நுண்ணறிவு மற்றும் செயல்திறன் மிக்க செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதில் தற்பொழுது கவனம் செலுத்தி வருகிறது.

ஆகையால் சிங்கப்பூரில் ஒரு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த நிலையமானது ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் என்விடியாவின் இரண்டாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக அமைய உள்ளது.

டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் துறை அமைச்சர் ஜோசபின் தியோ இந்த செய்தியை இன்று (மே 20) நடைபெற்ற 2026 ATX மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சி நிலையத்தை என் விடியா நிறுவனம் உள்ளூர் பல்கலைக்கழகங்கள், தொழில் கூட்டாளிகள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூரின் தற்போதைய பலங்களை வலுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும், உள்ளூர் செயற்கை நுண்ணறிவு திறமையாளர்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்துவதற்கும் இந்த ஆராய்ச்சி நிலையம் வழிவகுக்கும். மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வழிகளை ஆராய்வதற்கும் இது உதவியாக இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சி நிலையம் உடலமைந்த நுண்ணறிவு மற்றும் உயர் செயல்திறன் செயற்கை நுண்ணறிவு ஆகிய இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்த உள்ளது.

உடலமைந்த நுண்ணறிவு அறிவார்ந்த அமைப்புகளை பௌதீக உலகில் உணரவும், சிந்திக்கவும் அவற்றை செயல்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது.

அதேசமயம் உயர்-செயல்திறன் செயற்கை நுண்ணறிவு கணினி செலவுகளைக் குறைக்க உதவும். மேலும் ஆற்றல் திறனை மேம்படுத்தவும் மற்றும் விரிவாக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை ஆதரிக்கவும், நுண்ணறிவு மாதிரிகளையும் உள்கட்டமைப்பையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK