சிங்கப்பூரில் BRT பேருந்து விபத்து ..!!பயணிகளின் நிலை என்ன ..!!

சிங்கப்பூரில் BRT பேருந்து விபத்து ..!!பயணிகளின் நிலை என்ன ..!!

சிங்கப்பூரில் லோர்னி சாலையில் மகிரச்சி நீர்த்தேக்கத்திற்கு அருகே எஸ்.பி.எஸ் டிரான்சிட் பேருந்தும், ஒரு கனரக லாரியும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் எஸ்.பி .எஸ் ட்ரான்சிட் பேருந்தின் முன் பக்க கண்ணாடி நொறுங்கி அதன் முன்பக்க கதவானது சேதம் அடைந்துள்ளது. கனரக லாரியின் தடுப்பு வேலியின் ஒரு பகுதி சாலையில் தனியாக விழுந்துள்ளது.

இது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் ஆனது நேற்று (மார்ச் 27) இரவு 10:21 மணி அளவில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தாம்சன் சாலைக்கு முன்னே உள்ள பிராடெல் நோக்கிச் செல்லும் லோர்னி சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அந்த வழியில் செல்லும் வாகனங்கள் 2 மற்றும் 3 ஆம் அடித்தளங்களைத் தவிர்த்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.

விபத்து குறித்து விசாரணை செய்வதற்காக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். விசாரணை மேற்கொள்வதற்காக காவல்துறையினர் பேருந்தை ஆய்வு செய்தனர்.

ஆய்வு மேற்கொண்டதில் பேருந்தில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சுயநினைவுடன் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படைப்புக்கு நேற்று (மார் 27) இரவு சுமார் 10:30 மணியளவில் விபத்து குறித்த தகவல் கிடைத்ததாகவும், SCDF வீரர்கள் காயமடைந்த ஒரு நபரை டான் டாக் செங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

காவல்துறையின் விசாரணைக்கு 55 வயதான பேருந்து ஓட்டுநர் ஒத்துழைப்பு தருவதாகவும், மேலும் இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK