சிங்கப்பூரில் கவனமின்றி காரை ஓட்டிய 36 வயது ஆடவர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு..!!

சிங்கப்பூரில் கவனமின்றி காரை ஓட்டிய 36 வயது ஆடவர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு..!!

சிங்கப்பூரில் ஜூன் 17ஆம் தேதி காலை கல்லாங் பகுதியில் சிவப்பு நிற செடான் கார் ஒன்று சாலையின் நடுவில் இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்ப்புற பாதைக்கு திரும்பி ஒரு டாக்ஸி உடன் மோதியதில் சாலை விபத்து ஏற்பட்டது.

விபத்து ஏற்பட்டதை அடுத்து ஓட்டுனர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார் அவர் சுரங்கப்பாதை நிலையத்தை நோக்கி ஓடியதாக அதனை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து காணொளி பதிவானது இணையத்தில் பரவி வந்தது அந்த வீடியோ பதிவில் சிவப்பு நிற காரின் முன் பகுதியில் கடுமையாக சேதம் அடைந்துள்ளதும் அதன் முகப்பு மூடி உருக்குலைந்து மேல் நோக்கி தூக்கப்பட்டுள்ளதும் முன்பக்க கண்ணாடி நொறுங்கி இருப்பதும் காரின் பாகங்கள் தரையில் சிதறி கிடப்பதும் தெரிகிறது.

இந்த கார் விபத்தில் 60 வயது டாக்ஸி ஓட்டுனரும் அதில் பயணித்த 43 வயது பெண்ணையும் காயமடைந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

ஜூன் 18-ஆம் தேதி (நேற்று) 8 மணி அளவில் கல்லாங் பார் வழியே லாவண்டர் தெருவை நோக்கிச் செல்லும் பாதையில் காரும் டாக்ஸியும் விபத்து சிக்கியதாக காவல்துறையினருக்கு அழைப்பு வந்தது என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் காருக்குள் போதைப்பொருள் அதற்கான உபகரணங்கள் மின் சிகரெட்டுகள் என இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து தப்பிச்சென்ற கார் ஓட்டுனரை தீவிரமாக 5 மணி நேரம் தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

ஐந்து மணி நேரத்தில் கார் விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற கார் ஓட்டுனரை காவல்துறை அதிகாரிகள் பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்த நபர் மீது ஆயுதம் வைத்திருந்த சந்தேகத்திலும் அதிகாரம் இல்லாமல் ஆயுதங்களை ஏந்திய குற்றத்திற்காகவும் விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் போக்குவரத்தில் இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் இன்று(19/06/26) நீதிமன்றத்தில் இவர் மீது குற்றம் சாட்டப்பட உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK