ஒரு நூற்றாண்டு கால வணிகம் முடிவு..!! சின்சி கேட்டரிங் சர்வீசஸ் மூடல்..!!

ஒரு நூற்றாண்டு கால வணிகம் முடிவு..!! சின்சி கேட்டரிங் சர்வீசஸ் மூடல்..!!

சிங்கப்பூரில் 92 ஆண்டுகளாக இயங்கி வரும் உள்ளூர் உணவு விற்பனை நிறுவனமான “ஃபுட்எக்சர்வீசஸ்” மூடப்பட போவதாக அறிவித்துள்ளது. இதனால், சின்சி கேட்டரிங் சர்வீஸ் – இன் 1 நூற்றாண்டு (கிட்டத்தட்ட) கால வணிகமானது முடிவுக்கு வரப்போகிறது.

சின்சி கேட்டரிங் சர்வீஸ் கம்பெனி, ஃபுட் ஹோல்சேல் கம்பெனி என்ற பெயரில் முதலில் இயங்கி வந்தது. 1939 ஆண்டில் ஹூவாங் உடன்பிறந்த தாத்தாவால் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. 2007 ஆம் ஆண்டு நிறுவனத்திற்கு புது பெயர் சூட்டப்பட்டது.

சின்சி கேட்டரிங் சர்வீஸ் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தாங்கள் இரண்டாம் உலகப்போர், சிங்கப்பூரின் சுதந்திரம், 1997 ஆசிய நிதி நெருக்கடி, சார்ஸ் (SARD), கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் தற்போது உள்ள உலக நிலைமை ஆகியவற்றை கண்டதாக கூறியுள்ளது. இருப்பினும் கடந்த 6 ஆண்டுகளில் மாபெரும் இன்னல்களோடு போராடிய பிறகு ”உண்மையில் நாங்கள் சரணடைவதற்கான நேரம் இதுதான் ” என்றும் தெரிவித்துள்ளனர்.

பாண்டன் லூப்பில் உள்ள தலைமை அலுவலகக் கட்டிடத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் செயல்பாடுகளை நிறுத்தும் முடிவையும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

XPACE -யை இழப்பது தலைமையகத்தை இழப்பதற்கு சமம் எனவும், குறுகிய காலத்தில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவது மிக கடினம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து மூன்றாம் தலைமுறை வணிக உரிமையாளரான ஹூவாங் வெயிடிங் மற்றும் அவரது சகோதரரான ஹூவாங் சியாங் ஹான் ஆகியோர் ஆகியோர், கருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பை நேற்று (மார்ச் 3)அதிகாலை முகநூல் மூலமாக அறிவித்தனர்.

பல ஆண்டுகளாக சேவைகளை வழங்க வாய்ப்பளித்த உள்ளூர் சந்தைக்கு சின்சி கேட்ரிங் அவர்களது நன்றியையும் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 13ஆம் தேதி சின்சி கேட்டரிங் சர்வீஸ் நிறுவனம் சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தது.

இந்த நிலையில் நிறுவனத்தின் மூடல் குறித்து தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம், மொத்த வர்த்தகத் துறையில் உள்ள 4,000 வாடிக்கையாளர்களின் பயிற்சி தேவைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக, ” SKills Future Queen Bee Programme ” ஆக சின்சி சர்வீஸ் நிறுவனம் நியமிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK