சிங்கப்பூரில் தொடங்கிய நாணயக் கண்காட்சி..!! அனுமதி இலவசம்..!!

சிங்கப்பூரில் தொடங்கிய நாணயக் கண்காட்சி..!! அனுமதி இலவசம்..!!

சிங்கப்பூரில் சைனா டவுன் பாயிண்ட் ஆட்ரியம் கடைத் தொகுதியில் நேற்று (01.01.2026) சிங்கப்பூர் நாணயம் சாலையின் வருடாந்திர சந்திர முறை கண்காட்சியானது அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

இந்த கண்காட்சியில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சீன புத்தாண்டு நாணயங்கள், நினைவு சின்னங்கள், மற்றும் பரிசு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாதம் 11ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறும்.

ஒவ்வொரு நாளும் காலை 11 மணியிலிருந்து இரவு 8:00 மணி வரை கண்காட்சி பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கண்காட்சியை பார்ப்பதற்கு அனுமதி முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டுக்கு இந்த கடைத் தொகுதிக்கு சென்ற மக்கள் அனைவரும் காலை 10 மணி அளவில் சிங்க நடனம் பார்த்து மகிழ்ந்தனர்.

சீன புத்தாண்டுக்கான பொருட்களை மக்கள் அனைவரும் வாங்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கண்காட்சி பலரையும் ஈர்த்து வருகின்றது.

இந்த கண்காட்சியில் சிங்கப்பூரின் குதிரை ஆண்டு நாணயம் 10 வெவ்வேறு விதங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புது வடிவங்களில் வெவ்வேறு மதிப்புகளில் அறிமுகம் கண்டுள்ள நாணயங்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

பொங்கல் வாட்டர் வே பூங்காவில் இருக்கும் விளையாட்டு திடலில் பின்னணியில் சீன பஞ்சாங்கத்தின் ஏழாவது விலங்காக உள்ள குதிரை நாணயத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK