சிங்கப்பூர் அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!! ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும்..!!
சிங்கப்பூர்: தேசிய மேம்பாட்டு அமைச்சர் சி ஹாங் டாட் நேற்று (ஜூன் 8) காலை முகநூலில் ஒரு முக்கிய தகவலை பதிவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியமும் (HDB) நகர்ப்புற மறு சீரமைப்பு ஆணையமும் (URA) வணிக வாகனங்களுக்கான பருவ கால வாகனம் நிறுத்துமிட கட்டணங்களை குறைக்க உள்ளதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் தேசிய மேம்பாட்டு அமைச்சகம் வணிகத்திற்கு சாதகமான விதிமுறைகளையும் மறு ஆய்வு செய்வதன் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் பருவ கால வாகன நிறுத்துமிட கட்டணங்கள் தனியார் கார்களுக்கான கட்டணத்திற்கு இணையாக குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிறு மற்றும் நடுத்தர நிறுவன உரிமையாளர்கள் மற்றும் புதிய விண்ணப்பதாரர்கள் உட்பட ஏற்கனவே பருவ கால அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் என்று சுமார் 2000 பேர் பயனடைய இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதில் குறிப்பாக, HDB வாகனங்களுக்கு முதல் வாகனத்திற்கு மாதா மாதம் $80 முதல் $110 வரையிலும், URA வாகன நிறுத்துமிடங்களில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் மாதா மாதம் $90 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 1801 கிலோ முதல் 2000 கிலோ வரையிலான காலியான எடை கொண்ட வணிக வாகனங்களுக்கு, HDB வாகன நிறுத்துமிடங்களில் பருவ கால வாகன நிறுத்துமிட அனுமதிச்சீட்டிற்கு மாதத்திற்கு $185 உம், URA வாகன நிறுத்தும் இடங்களில் $120 முதல் $160 வரையிலும் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
ஜூலை மாத பருவகால அனுமதிச்சீட்டுகளை வாங்கி ஆகஸ்ட் மாதம் முதல் இந்த சேவையை பயன்படுத்தும் வணிக வாகனங்களுக்கு இந்த புதிய கட்டணங்கள் பொருந்தும் என்று தேசிய மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய கட்டண விவரங்கள் குறித்து ஏற்கனவே வாகன நிறுத்த பருவ கால அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களுக்கு அதிகாரிகள் கடிதங்கள் அனுப்புவார்கள் என்றும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.