ComfortDelGro – வின் புதிய வசதி..!! QR ஸ்கேன் மூலம் முன்பதிவு..!!

ComfortDelGro - வின் புதிய வசதி..!! QR ஸ்கேன் மூலம் முன்பதிவு..!!

சிங்கப்பூர் : ComfortDelGro – வின் “zig” என்ற மொபைல் செயலியில் புதிய முன்பதிவு வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. “ஸ்கேன் செய்து முன்பதிவு செய்யும் ” (Scan-to-book) வசதியை ComfortDelGro நிறுவனம் நேற்று (மே 5)அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதி மூலம் பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் QR கோடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் அவர்களது பயணங்களின் முன்பதிவை எளிதாக்க முடியும். இந்த வசதி முன்பதிவு செயல்முறை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல் சேவையின் தன்மையையும் மேம்படுத்தும் வகையில் உள்ளது.

இதுகுறித்து ComfortDelGro வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, இந்த புதிய வசதியால் முதியவர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மென்மையான மற்றும் நம்பகமான போக்குவரத்து சேவைகளை வழங்க முடியும் என்று கூறியுள்ளாார்.

பயனாளர்கள் குறிப்பிட்ட பிக்-அப் இடத்தில் QR கோட்டை ஸ்கேன் செய்தால் போதுமானது. சிஸ்டம் தானாகவே பிக்-அப் இடத்தை உள்ளிட்டு முன்பதிவை உடனடியாக முடித்துவிடும். பயணிகள் பயணத்தின் போது பணம் செலுத்தவும் முடியும் வகையில் இந்த புதிய வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கேன் செய்து முன் பதிவு செய்யும் வசதியானது நாடு முழுவதும் உள்ள வாழ்க்கைமுறை மையங்கள், பேருந்து நிலையங்கள், அதிக போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் மருத்துவ மையங்கள் போன்ற பகுதிகளில் படிப்படியாக விரிவு படுத்தப்பட உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ComfortDelGro, Tai Wo Kwan அறக்கட்டளையுடன் இணைந்து, 3 மூத்த குடிமக்கள் மையங்களில் இந்த அம்சத்தை முதலில் அறிமுகப்படுத்தியுள்ளது. முதியவர்கள் தூதர்களாக செயல்பட்டு தங்களது சக வயதினருக்கு இதை விளம்பரப்படுத்தவும் விளக்கவும் உதவினார்கள். இதன் மூலம் சமூக தொடர்பாக வரை அவர்கள் வளர்த்து உள்ளனர்.

Compete Singapore – இன் சக வயதினருக்கான போக்குவரத்து சேவைகளின் தலைவர் Huang Zuozhe , நிறுவனம் மேலும் விரிவான போக்குவரத்துச் சேவைகளை ஊக்குவிப்பதிலும், பல்வேறு குழுக்களின் பயணத்தை எழுத ஆக்குவதிலும் உறுதியாக உள்ளதாக கூறியுள்ளார்.

தங்களது இடங்களில் QR கோடுகளை நிறுவப் பெறவும் நிறுவனங்களும், கூட்டாளர்களும் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

“mobility_ “pax_pm@comfortfelgro.com”

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.