சிங்கப்பூர் – ஜோகூர் ஆகிய இரு இடங்களில் அமைக்கப்படுகின்ற ரயில் கட்டமைப்பு இணைப்பு குறித்த புதிய சட்டம் மே 5(நேற்று) அன்று அமலுக்கு வந்தது.
ரயில் கட்டமைப்பை இணைப்பு செயல்பட தொடங்கும் போது ரயில்வே பாதுகாப்பு எல்லை தாண்டிய சம்பவங்களை சிங்கப்பூர் மற்றும் மலேசியா எவ்வாறு கையாளும் என்பதை வரையறுக்கும் வண்ணத்தில் இந்த புதிய சட்டம் இருக்கும் என கூறியுள்ளது.
மேலும் இந்த சட்டம் சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் நார்த் ஜோகூர் பாருவின் புக்கிட் சாகர் ஆகிய இரு இடங்களில் அமைக்கப்படும் ஆர் டி எஸ் இணைப்பு ரயில் நிலையங்களில் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த குடிநுழைவு சோதனைகளுக்கும் இந்த புதிய சட்டம் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
நான்கு கிலோமீட்டர் ரயில் இணைப்பில் எல்லை தாண்டிய நிகழ்வுகளை நேர்வழிப்பதற்கான கட்டமைப்பு குறித்த நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சரும் உள்துறைக்கான இரண்டாவது அமைச்சருமான எட்வின் டோங் விவரித்துள்ளார்.
மேலும் இந்த இணைப்பு இந்த ஆண்டு (2026) டிசம்பரில் செயல்பட தொடங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரயில்களில் ஏற்படுகின்ற கோளாறுகளால் பாதிக்கப்பட்ட ரயிலால் தொடர்ந்து பயணம் செய்ய முடிந்தால் அது எங்கு சென்று இருக்கிறதோ அந்த ரயில் நிலைய அதிகாரிகள் பிரச்சனைகளை கையாளுவர்.
ஆனால் பிரச்சனைகள் நடுவில் ஏற்படும் போது ரயில் நின்று விட்டால் அதை எந்த நாட்டில் இருக்கிறதோ அந்த நாடு ரயிலின் பிரச்சனையை சரி செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய எல்லையான தூண் 47க்கும் சிங்கப்பூர் எல்லையான தூண் 48க்கும் இடையே ரயில் நின்று விட்டால் இடையூறுக்கு யார் பொறுப்பேற்பது என்பதை தீர்மானிக்க ரயிலின் முன் பகுதி பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ரயிலின் முன்பகுதி எந்த நாட்டில் இருக்கிறதோ அந்த நாடு முதன்மை பொறுப்பை ஏற்றுக்கொண்ட சம்பவ மேலாளராக செயல்பட்ட ரயில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
சிங்கப்பூர் நோக்கி வரும் ரயிலுக்கு அதன் முன்பகுதித்தோன் 48 கடக்கும் வரை மலேசியா சம்பவ மேலாளராக இருக்கும் அதன் பிறகு ரயிலின் பெரும்பகுதி மலேசியாவில் இருந்தாலும் சிங்கப்பூர் பொறுப்பேற்கும் என திரு டோங் கூறியுள்ளார். மலேசியாவை நோக்கி செல்லும் ரயில்களுக்கு அதன் முன் பகுதி தூண் 47 கடக்கும் வரை சிங்கப்பூர் சம்பவ மேலாளராக இருக்கும் அதன் பிறகு ரயிலின் பெரும்பகுதி சிங்கப்பூரில் இருந்தாலும் மலேசியா பொறுப்பேற்கும் எனவும் கூறியுள்ளார்.
தூண் 47 க்கும் 48க்கும் இடையே ரயில் செல்லாத நேரத்தில் தண்டவாளத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் எந்த நாட்டின் அதிகாரிகள் முதலில் சம்பவ இடத்திற்கு செல்கின்றனவோ அவர்களை அந்த பிரச்சனைகளை கையாளுவார்.
அவசர காலங்களில் மலேசியாவில் சிங்கப்பூர் அதிகாரிகளும் சிங்கப்பூரில் மலேசிய அதிகாரிகளும் இணைந்து பணியாற்றுவர் ஆயினும் அவர்கள் மற்ற நாட்டில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் டாக்டர் டோங் குறிப்பிட்டுள்ளார்.