சிங்கப்பூரில் நாளை குடமுழுக்கு விழா..!! பேருந்து சேவை பாதிப்பு..!!

சிங்கப்பூரில் நாளை குடமுழுக்கு விழா..!! பேருந்து சேவை பாதிப்பு..!!

சிங்கப்பூரில் நாளை(ஜூன் 18) ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

இதனால் அதிகாலை பேருந்து சேவை தொடங்கும் நேரத்தில் இருந்து நாளை (ஜூன் 18ஆம் தேதி) மாலை 6:00 மணி வரை யிஷூன் அவன்யூ 3 சாலையில் பேருந்து சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

இதனால் தற்காலிக பாதை மாற்றப்பட்டுள்ளதாகவும், பேருந்து சேவை எண் 169 மற்றும் 860 பேருந்துகள் சில நிறுத்தங்களை தவிர்க்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்காது?
👉யிஷூன் அவன்யூ 3 ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்
👉ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு எதிர்ப்புறம்

👉செம்பவாங் சாலை பிளாக் 722
👉செம்பவாங் சாலை பிளாக் 722 -க்கு எதிர்ப்புறம்

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய பின்வரும் இணைய பக்கத்தை பார்க்கவும்.
🌐http://go.gov.sg/smmt-kumbhabishegam2026

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK