செந்தோசாவில் பிடிபட்ட முதலை..!! கருணைக்கொலை செய்யப்பட்டதா..??

செந்தோசாவில் பிடிபட்ட முதலை..!! கருணைக்கொலை செய்யப்பட்டதா..??

செந்தோசா கோவ் கடற் பகுதியில் மே 6ஆம் தேதி மாலை தென்பட்ட முதலையை அன்று இரவு 9 மணி அளவில் தேசிய பூங்கா கழக ஒப்பந்தக்காரர்களால் பொறி வைத்து பிடிக்கப்பட்டது.

சுமார் இரண்டு மீட்டர் நீளம் உள்ள அந்த முதலைக்கு மயக்கம் மருந்து செலுத்தி மனிதாபிமான முறையில் கருணை கொலை செய்யப்பட்டது என கழகத்தின் வனவிலங்கு மேலாண்மை பிரிவு இயக்குனர் ஹாவ் சூன் பெங் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதனை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான சாத்திய கூறுகள் இல்லாத காரணத்தாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 20 முதலைகள் இருக்கும் சுங்கை புலோ சதுப்பு நிலப்பகுதி இடைப்பட்ட முதலையை விடுவிப்பதற்கு ஏற்ற இடமானதாக அல்ல எனக் கூறி திரு ஹவ், 2021 ஆம் ஆண்டில் பூங்கா கழகம் ஒரு சிறிய முதலை அங்கு மாற்றி இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

முதலையை வேறு இடத்திற்கு மாற்றினாலும் அது பிடிபட்ட இடத்திற்கு மீண்டும் திரும்புவதற்கான அபாயம் உள்ளது. மேலும் இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

முதலையே தங்கள் பராமரிப்பில் ஏற்றுக் கொள்ள முடியுமா என கழகம், மண்டாய் வனவிலங்கு குழுமத்துடன் கேட்டதாகவும், ஆனால் குழுமத்தினால் அதனை ஏற்க முடியவில்லை என்றும் திரு ஹாவ் கூறினார்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK