சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் நடத்திய நடவடிக்கை..!! 2 பேர் கைது..!! எதற்காக..??

சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் நடத்திய நடவடிக்கை..!! 2 பேர் கைது..!! எதற்காக..??

சிங்கப்பூரில் இந்த மாதம் (மே) சுங்கத்துறையினர் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மது அல்லாத பானங்கள் என முத்திரையிடப்பட்ட அட்டைப் பெட்டிகள் மற்றும் உறைகளில் பீர் மற்றும் சாராயங்களை நுட்பமான முறையில் மறைத்து கடத்திய குற்றத்திற்காக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வரி செலுத்தப்படாத 9,200க்கும் மேற்பட்ட பீர் மற்றும் சாராயப் பாட்டில்கள் மற்றும் வேறுன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து சிங்கப்பூர் சுங்கத்துறை இன்று (மே 20) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மே 5-ஆம் தேதி பெடோக் நார்த் அவென்யூ 4 இல் உள்ள ஒரு தொழில் கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையின் போது ஒருவர் பொருள்கள் அடங்கியப் பெட்டிகளை வெளியே எடுத்து செல்வதை அமலாக்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அதனை சோதனையிட்டபோது அமலாக்க அதிகாரிகள் 13 தட்டுகளில் இருந்த பொருட்களில் வரி செலுத்தப்படாத பீர் மற்றும் மதுபானங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் 2460 கேன் பீர், 6468 பாட்டில் பீர் மற்றும் 320 பாட்டில் மதுபானங்கள் அடங்கும். இதன் மொத்த வரி ஏய்ப்பு தொகையானது $19,791 ஆகும்.

25 வயது மலேசிய நபரும், 38 வயது சீன நபரும் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

30 வயது மலேசிய பெண் ஒருவர், 34 வயது வியட்நாமிய ஆண் ஒருவர் மற்றும் 41 வயது உள்ளூர் நிரந்தர குடியுரிமையாளர் ஆகியோரும் இந்த விசாரணைக்கு உதவி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டபூர்வமான பொருட்கள் வரி விதிக்கப்படாத மதுபானங்களை வேண்டுமென்றே மறைப்பது, வரிகளைத் தவிர்ப்பதற்கும், சோதனைகளைத் தவிர்ப்பதற்கும், கடத்தல்காரர்கள் எந்த வழியையும் கையாள தயாராக இருப்பதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

வரிசெலுத்தப்படாத பொருட்களை வாங்குதல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல், விநியோகித்தல், சேமித்தல், வைத்திருத்தல், உடைமையில் வைத்திருத்தல் அல்லது வர்த்தகம் செய்தல் ஆகிய அனைத்தும் சீன சட்டத்தின்படி கடுமையான விதிமீறல்கள் ஆகும்.

இதனை மீறுபவர்களுக்கு ஏய்கப்பட்ட வரித்தொகையைப் போல் 40 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK