வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி மோசடி செய்த நபர்..!!

வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி மோசடி செய்த நபர்..!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், சிங்கப்பூருக்கு வேலைக்குப் அனுப்புவதாக கூறி பலரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் தற்போது முக்கிய சிசிடிவி காட்சிகள் கிடைத்த நிலையில் அது விசாரணைக்கு உதவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்குத் தொடர்பான சிசிடிவி பதிவுகளில், சந்தேக நபர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பணம் பெறும் இடங்கள், அலுவலகம் என கூறப்பட்ட இடங்களுக்கு வருகை தரும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்சிகள் பண பரிவர்த்தனை நடந்த நேரம் மற்றும் தொடர்புடைய நபர்களின் நடமாட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சிசிடிவி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, போலீசார் வழக்கை தீவிரமாக விசாரித்துவருவதுடன்,பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் ஆவணங்களும் இணைத்து ஆய்வு செய்யப்படுகின்றன.

சிங்கப்பூருக்கு வேலை என்ற பெயரில் நடைபெறும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.