என்னது சிங்கப்பூருக்கு போக தமிழ்நாட்டுல டெஸ்ட் சென்டர் ஓபன் பண்ணிட்டாங்களா?
சிங்கப்பூர் செல்வதற்கு மிகவும் சிறந்த வழி என்றால் அது டெஸ்ட் அடித்து செல்வது தான்.
தமிழ்நாட்டில் சிங்கப்பூர் செல்வதற்காக டெஸ்ட் அடிக்கும் சென்டர்கள் பல உள்ளது.
ஆனால் சிங்கப்பூரில் இருந்து கோட்டா வராத காரணத்தால் கடந்த இரண்டு வருடங்களாக அனைத்து டெஸ்ட் சென்டர்களும் மூடியே உள்ளது.
இந்த நிலையில் தற்பொழுது டெஸ்ட் சென்டர் மீண்டும் ஓபன் பண்ண போவதாகவும் மீண்டும் அனைவரும் சிங்கப்பூர் டெஸ்ட் அடித்து செல்லலாம் என்றும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் பதிவுகளை பார்க்க முடிகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் இதே போல் பல வீடியோக்கள் பார்க்க முடிந்தது.
ஆனால் நான் சென்னையில் உள்ள ஒரு சில டெஸ்ட் சென்டர்களை தொடர்பு கொண்ட பொழுது இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வரவில்லை என்றும் இதை நம்பி யாரும் வெளியில் பணம் கட்ட வேண்டாம் என்றும் சொன்னார்கள்.
ஒரு சில டெஸ்ட் இன்ஸ்டியூட் நீண்ட நாட்கள் ஆகவே மிகவும் குறைந்த எண்ணிக்கையில் ஆட்களை இங்கு பயிற்சி கொடுத்து வெளிமாநிலங்களில் டெஸ்ட் அடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைத்தவிர வேற எந்த மாற்றமும் இன்னும் வரவில்லை.
ஒரு சில ஏஜெண்டுகள் இதுபோல் கூறி பணத்தை வாங்கி ஒரு சில மாதங்களுக்குப் பிறகு அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கின்றனர். ஒரு சிலர் திருப்பித் தருவதும் இல்லை.
இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை யாரும் பணம் கட்டி ஏமாற வேண்டாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் நமது இணைய பக்கத்தில் மற்றும் நமது டெலிகிராம் பக்கத்தில் கண்டிப்பாக தெரிவிக்கப்படும்.