டிசம்பர் 31 வரை மட்டுமே..!!! இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 2020-ல் COVID-19 காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட S$500 திறன் பயிற்சி மானியம் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. செப்டம்பர் நிலவரப்படி, சுமார் 70% சிங்கப்பூரர்கள் இதைப் பயன்படுத்தவில்லை என்று SkillsFuture Singapore (SSG) தெரிவித்துள்ளது.
மொத்தத்தில் 7.78 லட்சம் பேர் இதை பயன்படுத்தியுள்ளார்கள். இதில் பெரும்பாலானோர் 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
பிரபலமான பாடநெறிகளில் தகவல் தொழில்நுட்பம், உணவு சேவைகள், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை ஆகியவை அடங்குகின்றன.
கடந்த ஆண்டு திறன் பயிற்சி மானியங்களைப் பயன்படுத்திய சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 35% அதிகரித்து 260,000 ஐ எட்டியுள்ளது.
SSG தெரிவித்ததாவது, காலக்கெடு நீட்டிப்பு செய்யப்படமாட்டாது. பணியிடங்கள் ஏற்கனவே பயிற்சி செலவுகளை ஏற்கும் நிலையிலும், சிலர் நேரமின்மை மற்றும் பொருத்தமான பாடநெறி இல்லாமை காரணமாக இதை பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் சிங்கப்பூரர்களை எதிர்கால பயிற்சித் தேவைக்காக காலாவதி தேதி இல்லாத SkillsFuture மானியங்களைப் பயன்படுத்த ஊக்குவித்துள்ளனர்.