அதிர்ச்சி..!! ரெட்ஹில் பகுதியில் முதியவரிடம் நடந்த வழிப்பறிக் கொள்ளை..!!

அதிர்ச்சி..!! ரெட்ஹில் பகுதியில் முதியவரிடம் நடந்த வழிப்பறிக் கொள்ளை..!!

சிங்கப்பூர்: ரெட்ஹில் குளோஸ் பகுதியில் புதன்கிழமை (24.12.25) பகல் 2:50 மணிக்கு, ஒரு முதியவரிடம் வழிப்பறிக் கொள்ளை நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதியவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் பணம் பறிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

இச்சம்பவம் குறித்து உதவிக்கேட்டு அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன், நான்கு மணிநேரத்தில் 20 வயது ஆண் மற்றும் உதவியாளராக இருந்த 17 வயது இளம் நபர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர்.

அவர்களிடமிருந்து S$1,625 மதிப்புள்ள ரொக்கம் மீட்கப்பட்டது.

இரு சந்தேக நபர்கள் மீது இன்று (26.12.25) நீதிமன்றத்தில் வழிப்பறிக் கொள்ளை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொருவருக்கும் ஒரு வருடம் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

போலீசார் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ளும் பொதுமக்களுக்கு, அமைதியாக இருந்து கொள்ளையர்களின் உடை, தோற்றம் போன்ற அடையாளங்களை மனதில் வைத்து உடனே காவல்துறையை அழைக்குமாறு அறிவுறுத்தினர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK