சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார ஸ்கூட்டர்..!! ஓட்டுநர் உயிர் பிழைத்தாரா..??

சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார ஸ்கூட்டர்..!! ஓட்டுநர் உயிர் பிழைத்தாரா..??

சிங்கப்பூர்: யிஷூனில் உள்ள பூங்கா இணைப்புச் சாலையில் மின்சாரக் ஸ்கூட்டரை ஒருவர் அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இது குறித்த காணொளி பதிவானது sgfollowsall என்ற சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்ட அதனை ஒரு நெட்டிசன் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவாக பதிவிட்டிருக்கிறார்.

இந்த வீடியோவை படம் பிடித்த அந்த நெட்டிசன் காலை நேரத்தில் யூஷூன் அவன்யூ 8 பகுதியில் உள்ள பூங்கா இணைப்புச் சாலையில் ஜாகிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு மின்சார ஸ்கூட்டர் அவரை கடந்து வேகமாக சென்றதாக கூறப்பட்டுள்ளது.

அவர் சாலையில் செல்ல மோட்டார் சைக்கிளின் வேகத்தில் வந்து கிட்டதட்ட என் மீது மோதி விட்டான் என கூறி நூல் அளவு வித்தியாசத்தில் அந்த இடைவெளி மிகவும் குறைவாக இருந்ததால் அதிவேகத்தில் சென்ற மின்சார ஸ்கூட்டரின் சத்தம் கேட்ட மிகவும் பயந்து போனதாகவும் கூறியிருந்தார்.

அவரை கடந்து சென்ற சில வினாடிகளுக்குள் அந்த ஓட்டுனரின் மின்சார ஸ்கூட்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனால் ஓட்டுனர் புல்வெளியின் ஓரத்தில் விழுந்துள்ளார். விழுந்த வேகத்தில் அவருக்கு ரத்தம் வழிந்து உள்ளது.

இதனை அடுத்து ஓட்டுனர் ஆரம்பத்தில் சுய நினைவு இல்லாமல் இருந்ததாகவும் ஆம்புலன்ஸ் வந்த போது தான் அவருக்கு கொஞ்சம் சுயநினைவு திரும்பியது என அந்த இணைய வாசி பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை(SCDF) ஜூன் 14ஆம் தேதி காலை சுமார் 7:35 மணியளவில் யிஷூன் அவன்யூ 8 பகுதியில் ஒருவருக்கு உதவி தேவைப்படுவதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது எனக் கூறியுள்ளது இதனைத் தொடர்ந்து, SCDF காயப்பட்ட அந்த நபரை கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK