இந்திய பயணம் குறித்துப் பகிர்ந்த சிங்கப்பூர் பிரதமர்..!!!

இந்திய பயணம் குறித்துப் பகிர்ந்த சிங்கப்பூர் பிரதமர்..!!!

சிங்கப்பூர் பிரதமர் இந்தியாவிற்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ இரண்டு நாள் பயணம் நேற்று (செப்டம்பர்) 4ஆம் தேதி முடிந்தது.

இந்தியா சென்று வந்த அனுபவங்களை சிங்கப்பூர் பிரதமர் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் சந்தித்துள்ளார்.

மேலும் அங்குள்ள இந்தியாவின் கல்வி அமைச்சர், திரு தர்மேந்திர பிராதான், தேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு அஜித் டோவல் ஆகியோரைச் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் மேலும் விரிவு படுத்தவும் தொடர்பான பேச்சு வார்த்தைகளை பேசியுள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் திரு வோங் கூறினார்.

இந்தியா சென்ற போது தமக்கு கிடைத்த வரவேற்பிற்கும் மற்றும் அங்கு வழங்கப்பட்ட விருந்தோம்பலுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இறுதியாக இந்திய பிரதமர் மோடி அவர்களையும் இந்திய அதிபர் முர்முவையும் சிங்கப்பூருக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉

 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan