சிங்கப்பூரில் குடியிருப்பு வட்டாரங்களில் அரசாங்கம் எடுத்த புதிய முயற்சிக்கு நிபுணர்கள் வரவேற்பு..!!
சிங்கப்பூர்: குடியிருப்பு வட்டாரங்களில் வைக்கப்படும் நீல நிறத் தொட்டியானது மறுபயனீட்டுத் திட்டத்தின் மூலம் வைக்கப்பட்டுள்ளது. இதில் சில நேரங்களில் குப்பைகளும் வீசப்படும் நிலைமையானது கொரோனா காலத்தில் இருந்து அதிகரித்து வந்தது.
கோவிட் -19 நோய்ப்பரவலுக்கு முன் 2019 ஆம் ஆண்டு காகித, அட்டைப் பெட்டிக் கழிவுகள் சுமார் 1,010 டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு 1,273 டன்னுக்கு அதிகரித்தது.
இதன் மூலம், திரவம், உணவுக் கழிவுகள் ஆகியவையும் நீல நிறத் தொட்டிகளில் போடப்படுவதால் மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்கள் மாசுபடுவதாக நிபுணர்கள் சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.
நீல நிறத் தொட்டிகளப் பலர் குப்பைத் தொட்டிகளாகப் பயன்படுத்துகின்றனர் எனவும் நிபுணர்கள் கூறினர். இதனால், நீல நிற மறுபயனீட்டுத் தொட்டிகளில் போடப்படும் ஏறக்குறைய 40 விழுக்கட்டுப் பொருள்களை மறுபயனீடு செய்ய முடியாத நிலை உருவானது.
இதனால், மின்வர்த்தகத்தால் காகிதக் கழிவு உற்பத்தி அதிகரித்து வரும் சூழலில் காகிதங்களையும் அட்டைப் பெட்டிகளையும் மறுபயனீடு செய்ய கூடுதல் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
காகித மறுபயனீட்டுக்கான கூடுதல் வழிகளை அரசாங்கம் ஆராய்வதாக ஜூலை 23 ஆம் தேதி நீடித்த நிலைத்தன்மை, பற்றி சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஜனில் கூறினார்.
இது குறித்து தேசிய சுற்றுப்புற அமைப்பு கூறியதாவது: பயன்படுத்தப்பட்ட அட்டைப்பெட்டிகளைச் சேகரிக்க இரும்புக் கூண்டுகளை நிறுவுதல் சிறந்தது. இந்த நடைமுறையை அறிமுகம் செய்தால், அனைத்து மறுபயனீட்டுப் பொருள்களையும் கழக பிளாக்குகளுக்கு அருகே உள்ள நீல நிறத் தொட்டிகளில் போடும் வழக்கத்தை கைவிடுவர்.
சிங்கப்பூரில் குறைவான மறுபயனீட்டு விகிதத்துக்கு இடையே ஏற்படும் அதிகமான காகிதக் கழிவுகள் உற்பத்தியாகும் நிலையின்போது, மறுபயனீட்டை அதிகரிப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் புதிய முயற்சிகளை துறை சார்ந்த நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் 12 விழுக்காட்டை விட அது இன்னும் குறைவு. கடந்த ஆண்டு சிங்கப்பூரின் உள்நாட்டு மறுபயனீட்டு விகிதம் இதுவரை இல்லாத வகையில் 11 விழுக்காடாகப் பதிவானது.
2030 ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு மறுபயனீட்டு விகிதத்தை 30 விழுக்காடாக அதிகரிக்க சிங்கப்பூர் இலக்கு நிர்ணயித்துள்ளது.