தெம்பனீஸில் ஏற்பட்ட தீ விபத்து- தீயணைப்பு வீரர் மருத்துவமனையில் அனுமதி..!!

தெம்பனீஸில் ஏற்பட்ட தீ விபத்து- தீயணைப்பு வீரர் மருத்துவமனையில் அனுமதி..!!

தெம்பனீஸில் உள்ள கூட்டுரிமை வீட்டில் நேற்று முன்தினம் (09.01.2026) இரவு 9:05 மணி அளவில் ஸ்ட்ரீட் 86, பிளாக் 23 இல் ஏற்பட்டதாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது குறித்த தகவலானது குடிமை தற்காப்பு படைக்க தகவல் கிடைத்ததை தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது 15 வது மாடி வீட்டின் அறையில் தீ ஏற்பட்டது தெரியவந்தது. தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடியுள்ளனர்.

தீ பரவலானது அறையைத் தாண்டி வேறு எந்த இடத்திலும் பரவவில்லை.

மேலும் முன்னெச்சரிக்கையை நடவடிக்கையாக அங்கிருந்த சுமார் 100 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.

இரண்டு தண்ணீர் குழாய்களைக் கொண்டு தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடினர்.

தீ ஏற்பட்டதன் பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த தீ அணைக்கும் போராட்டத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் கடமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உடனே சாங்கி போது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

இது போன்ற தீ சம்பவங்களை தவிர்க்க பொதுமக்களிடம் அதிகாரிகள் பாதுகாப்பான நடைமுறைகளை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK