வடக்கில் ஏற்பட்ட தீ விபத்து..!! புகை சிங்கப்பூருக்குள் பரவ வாய்ப்பு..!!

வடக்கில் ஏற்பட்ட தீ விபத்து..!! புகை சிங்கப்பூருக்குள் பரவ வாய்ப்பு..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் வடக்குப் பகுதிகளில் தொடர்ந்து ஏற்படும் தாவர தீ விபத்துகளால் உருவாகும் புகை மற்றும் மூடுபனி, வடக்கு மற்றும் வடகிழக்கு காற்றின் காரணமாக நாட்டிற்குள் வீசப்படலாம் என தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் சில பகுதிகளில் எரியும் வாசனையை உணரக்கூடும் என்றாலும், காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, நேற்று இரவு 10 மணி நிலவரப்படி சிங்கப்பூரின் 24 மணி நேர காற்று மாசுபாட்டு குறியீடு 43 முதல் 56 வரை பதிவாகியுள்ளது. இது நல்லது முதல் மிதமான அளவாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் myENV செயலி மூலம் சமீபத்திய காற்று தர விவரங்களை சரிபார்க்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் தகவலின்படி, கிழக்குப் பகுதிகளில் இதன் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. கிழக்கில் PM2.5 அளவு நேற்று இரவு 11 மணியளவில் ஒரு கன மீட்டருக்கு 47 மைக்ரோகிராமாக உயர்ந்தது. பின்னர் இன்று காலை 7 மணியளவில் அது 5 மைக்ரோகிராமாக குறைந்தது.

இன்று காலை 7 மணி நிலவரப்படி, மத்திய, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் 24 மணி நேர காற்று மாசுபாட்டு குறியீடு முறையே 51, 55 மற்றும் 60 புள்ளிகளாக பதிவாகி, மிதமான அளவில் இருந்தது. மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் இந்த குறியீடு 44 மற்றும் 36 புள்ளிகளாக இருந்து, நல்ல நிலையில் காணப்பட்டது.

இதனிடையே,ஹவ்காங்,தெம்பனிஸ், பொங்கோல் மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் எரியும் வாசனை அதிகமாக இருந்ததாக பல இணையவாசிகள் தெரிவித்துள்ளனர். சிலர் தலைவலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டதாகக் கூறியுள்ள நிலையில், சில பகுதிகளில் எந்தவிதமான வாசனையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் துறையின் தகவல்களின்படி, மலேசியா, கம்போடியா மற்றும் வியட்நாம் பகுதிகளில் பல இடங்களில் அடர்ந்த தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. மலேசியாவின் கோட்டா டிங்கி பகுதியில் ஏற்பட்ட பீட்லேண்ட் தீ விபத்து, வறட்சி மற்றும் பலத்த காற்று காரணமாக விரைவாக பரவி வருவதாகவும், தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK