சிங்கப்பூரில் தற்காப்பு அமைச்சகத்தின் கட்டிடத்தில் தீ விபத்து..!!

சிங்கப்பூரில் தற்காப்பு அமைச்சகத்தின் கட்டிடத்தில் தீ விபத்து..!!

சிங்கப்பூரில் தற்காப்பு அமைச்சகத்தின்(MINDEF) கட்டிடத்தில் நேற்று (ஏப்ரல் 6) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

புவன விஸ்தாவில் தற்காப்பு அமைச்சகத்தின் உத்திப்பூர்வ தகவல்தொடர்புத் தொழில்நுட்ப நிலையம் அமைந்துள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ பற்றிய கட்டிடம் 30 சயின்ஸ் பார்க் ரோட்டில் அமைந்துள்ளது. தீ விபத்து குறித்த தகவல் ஆனது நேற்று (ஏப்ரல் 6) மாலை 6:30 மணி அளவில் தங்களுக்கு கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்பே, கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் தீயை அணப்பதற்கு தண்ணீர் குழாய்கள் மற்றும் உலர் தூள் தீயணைப்பான்களைப் பயன்படுத்தி தீயை அணைத்து விட்டனர்.

தீ பற்றியதால் அந்த கட்டிடத்தில் பெரும் கரும்புகை எழுந்துள்ளது. இந்த காணொளி ஆனது சமூக ஊடகடங்களில் நேற்று (ஏப்ரல்6) பதிவேற்றப்பட்டது.

அந்த காணொளி அருகில் உள்ள சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கட்டிடத்தின் கூரையில் இருந்த குளிரூட்டும் கோபுரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK