பேருந்தின் மேற்கூரையில் பற்றிய தீ..!!! பயணிகள் அலறல்..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்ற பேருந்து ஒன்றின் கூரையில் பயணத்தின் போது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பயணிகளிடையே பெரும் பீதி ஏற்பட்டது.
எஸ்ஜி டெய்லி வெளியிட்ட காணொளியில், பேருந்தின் கூரையிலிருந்து ஆரஞ்சு நிற தீப்பிழம்புகள் மற்றும் தீப்பொறிகள் பறப்பதையும், உள்ளே அடர்ந்த புகை நிரம்பியிருந்ததையும் காண முடிந்தது.
இணைக்கப்பட்ட டிக்கெட் புகைப்படத்தின் அடிப்படையில்,அந்த பேருந்து இந்த மாதம் 5ஆம் தேதி இரவு 11:32 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டதாக நம்பப்படுகிறது.