பாஸ்போர்ட் ரினிவல்- க்கு நீங்கள் போக வேண்டிய இடம் எது தெரியுமா?
சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் இந்திய குடிமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
பாஸ்போர்ட், விசா, வெளிநாடு வாழ் இந்தியர் அட்டை (OCI), வாகன ஓட்டுநர் உரிமம், பிறப்புச் சான்றிதழ், திருமணப் பதிவு, சட்டப்பூர்வ அதிகார பத்திரம் மற்றும் பிற சான்றிதழ் சேவைகள் போன்ற பல தூதரக சேவைகளை விண்ணப்ப மையங்கள் மூலம் வழங்கி வருகிறது.
இந்திய தூதரக சேவை மையம் (Indian Embassy Service) குறித்த புதிய அப்டேட்:
✅BLS நிறுவனம்: கடந்த 2016 மே 30ஆம் தேதி முதல் இந்த நிறுவனமானது பல தூதரக சேவைகளை வழங்கி வந்தது. ஆனால் இத்தகைய சேவையை செப்டம்பர் 30ஆம் தேதி உடன் இந்த நிறுவனமானது நிறுத்திவிட்டது.
காரணம்: இந்த தூதரக சேவைகளை வழங்குவதற்கான ஏலக்குத்தகை நடத்தப்பட்டு தற்போது “அலங்கிட் அசைன்மென்ட் லிமிடெட் ” நிறுவனத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக: “VFS Global” சேவைகளை வழங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
✅ அலங்கிட் அசைன்மென்ட் லிமிடெட் நிறுவனம்: இந்த மாதம் (அக்டோபர் 1, 2025) முதல் தூதரக சேவையை அதிகாரபூர்வமாக தொடங்கியது என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த மையம் இயங்கி வரும் இரண்டு இடங்களின் பெயர்கள்: 1. பென்கூலன் Street 2. IOB Building at Cecil Street
தற்போது இயங்கிவரும் இப்புதிய நிலையங்களில் தூதரக சேவைகளை முன்கூட்டியே பெறுவதற்கு http://Singapore.alankitglobal.com இணையதளம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்கு முன்பாக இதுபோன்ற சேவை மையங்கள் எங்கும் இயங்கப்படவில்லை எனவே பாஸ்போர்ட் ரினிவல் செய்வதற்கு நேரடியாக இந்திய தூதரக அலுவலகத்திற்கு மட்டுமே செல்ல வேண்டி இருந்தது.
2015 – 2016 காலகட்டத்தில் தொடங்கப்பட்ட தேக்கா மாலில் இயங்கி வந்த BLS நிறுவனத்தால் இந்த தூதரக சேவை மையமானது பல தூதரக சேவைகளை வழங்கி வந்தது.
பிறகு, Sim Lim Tower என்ற இடத்தில் இந்த சேவை மையமானது இயங்கி வந்தது தற்போது அதுவும் இயக்கத்தில் இல்லை.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் அனைத்து சேவைகளுக்கும் இணையதள வசதி வந்துவிட்டது என்பதும் வரவேற்கத்தக்கது.