சிங்கப்பூர் காவல்துறை நேற்று(ஏப்ரல் 17) ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையில் தற்போது கல்வி நிறுவனங்களிலும் மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது மோசடிக்காரர்கள் கல்வி நிறுவனங்களிலும் ஈடுபட்ட கல்வி நிறுவனங்களாக நடித்து, செலுத்தப்படாத கல்வி கட்டணத்தை அவசரமாக செலுத்த வேண்டும் என்று ஏமாற்றி வருகின்றனர்.
இது போன்ற வழக்குகள் குறித்த புகார்கள் மார்ச் மாதம் காவல்துறைக்கு 2,700 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதை குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் பொதுவாக மாணவர்களினுடைய மின்னஞ்சல் முகவரிகளை களவாடி அல்லது அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனம் மின்னஞ்சல் முகவரிகளை போலவே போலி மின்னஞ்சல் டொமைன்களை உருவாக்கி அதை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்த தவறினால் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களை அச்சுறுத்துகின்றனர்.
எனவே பொதுமக்களுக்கு காவல்துறை ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அறிமுகம் இல்லாத நபர்கள் வழங்கக்கூடிய இணைப்புகள் அல்லது QR குறியீடுகளை பயன்படுத்தி பணம் செலுத்தவோ அல்லது பண பரிமாற்றம் செய்யவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் இவை வாங்கி தகவல்களை திருடும் மோசடி இணைய தளங்களுக்கு சென்றுவிடும் இதன் மூலம் பணம் செலுத்தும் வழிமுறைகள் மற்றும் வங்கி கணக்குகளில் ஏற்படும் புதிய அல்லது திடீர் மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை கூறியுள்ளது.
செலுத்தப்படாத கல்வி கட்டணம் தொடர்புடைய அறிவிப்பு உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு வழி மூலமாகவோ வந்தால் மோசடியில் சிக்காமல் தவிர்ப்பதற்கு பணம் செலுத்துவதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தகவல் கேட்டு சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் $56.6 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளனர். எனவே இது போன்ற கல்வி கட்டணங்களை கேட்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் மூலமாக அனுப்பும் எந்த ஒரு தகவலையும் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏதேனும் விசாரணை இருப்பின், 24 மணி நேரமும் செயல்படுகின்ற ஸ்கேன்சீல்டு உதவி எண்ணான 1799 ஐ அழைக்க வேண்டும் என காவல்துறையினர் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.