இன்று இரவு முதல்… பேருந்து சேவை மறு சீரமைப்பு..!!

இன்று இரவு முதல்... பேருந்து சேவை மறு சீரமைப்பு..!!

சிங்கப்பூரில் பேருந்து சேவைகள் வரும் நேரம் ஆனது தவறாக காட்டியதை தொடர்ந்து LTA தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலியில் தவறான நேரம் காட்டி இருக்கலாம் என தெரிவித்திருந்தது.

மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியது.

தற்போது பேருந்துகள் வரும் நேரத்தை காட்டும் ETA முறை இன்று (21.01.26) இரவு 8 மணி முதல் மறுசீரமைப்பு செய்யப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியிருக்கிறது.

பேருந்து வரும் சரியான நேரத்தை காட்டுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதுவரை பேருந்து எத்தனை மணிக்கு வரும் என்பதை காட்டுகிற நேரத்தை பார்க்க இயலாது.

எனவே பேருந்து முனையங்களிலும் MyTransport.SG அல்லது CityMapper, Google உள்ளிட்ட மற்ற செயலிகளிலும் பேருந்து சேவைக்கான நேரம் காட்டப்படாது என ஆணையம் தெரிவித்துள்ளது.

ETA முறை மீண்டும் வழக்கத்திற்கு வந்தவுடன் அந்த தகவலானது பயணிகளிடம் தெரிவிக்கப்படும் என ஆணையம் கூறி இருக்கிறது.

பேருந்து சேவைகள் எப்போதும் போல இயங்கும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

பேருந்துகள் வரும் நேரத்தை காட்டும் செயலிகளிலும் பேருந்து முனையங்களில் இருக்கும் திரைகளில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை பற்றியும் ஆணையம் விசாரித்து வருகிறது.

பேருந்துகள் வரும் நேரத்தை காட்டும் செயல்களில் ஏற்பட்ட கோளாறு இந்த மாதம் பத்தாம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதே வாரத்தில் இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK