ஏர் இந்தியா யாரிடம் நிதி உதவி கேட்டது..??

ஏர் இந்தியா யாரிடம் நிதி உதவி கேட்டது..??

இந்த ஆண்டு (2025) ஜூன் மாதத்தில் ஏர் இந்தியா விமானம் மூலமாக அகமதாபாத் நகரில் நடந்த விபத்து ஏர் இந்தியாவை நெருக்கடி நிலைக்கு தள்ளியுள்ளது.

இதன் காரணமாக ஏர் இந்தியா நிறுவனமானது அதன் சேவைகளை மேம்படுத்துவதற்காக நிதி உதவியை பிற குழுமத்திடமிருந்து நாடி உள்ளதாக தெரிய வருகிறது.

நிறுவனத்தினுடைய பொறியியல் பராமரிப்பு பிரிவுகளை உருவாக்குவதற்காக இந்த உதவி தேவைப்படுகிறது.

யாரிடம் நிதி உதவி கேட்க உள்ளது?
👉சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
👉TATA குழுமம்

எவ்வளவு நிதி தொகையை குழுமத்திடம் உதவி கேட்டுள்ளது?
ஏர் இந்தியா குறைந்தபட்சம் 100 பில்லியன் ரூபாய் (சுமார் 1.47 பில்லியன் டாலர்) நிதி உதவியை அதன் உரிமையாளர்களான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இடம் இருந்தும் டாட்டா குழுவிடம் இருந்தும் கேட்க உள்ளது.

இந்த தகவலானது Bloomberg ஊடகத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிதி உதவியை வட்டி இல்லா கடனாக வழங்குவார்களா அல்லது பங்கு மூலதனம் வழியாக வழங்குவார்களா என்பது குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை.

இந்த செய்தியை பற்றி பிராய்டர்ஸ் செய்தி நிறுவனமானது ஏர் இந்தியா சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் டாடா குழுமம் ஆகியவற்றிடம் கேள்வி எழுப்பிய போது எந்த  நிறுவனத்திடம் இருந்தும் பதில் வரவில்லை.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK