சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் குறைந்த பணத்தில் எப்படி தங்கம் வாங்கலாம்..?? என்று பார்க்கலாம்..!!
சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் பலர் மாத சம்பளம் மிகவும் குறைவாக இருக்கும். அதனால் அவர்கள் தங்கம் வாங்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். அதற்கு ஒரு சிறந்த வழி உள்ளது. அது என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தங்கத்தின் விலை எவ்வளவு வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
சிங்கப்பூரில் சம்பளம் வாங்குபவர்கள் கூட நகை மொத்தமாக வாங்குவதை நினைத்து மறைத்துக் கொண்டுதான் உள்ளார்கள். ஏனென்றால் அதன் விலை அந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.
சிங்கப்பூரில் ஒரு சில நகைக் கடைகளில் உதாரணத்திற்கு Maxicash, moneymax இது போன்ற கடைகளில் நகை நீங்கள் வாங்கும் பட்சத்தில் அந்த நகையின் விலையில் இருந்து 10% மட்டும் முதலில் கட்டினால் போதும். அதன் பிறகு நீங்கள் ஆறு மாதம் வரை எந்த வட்டியும் இல்லாமல் அந்த நகைக்கு உண்டான மொத்த தொகையை கட்டி நகையை உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
நீங்கள் எந்த தேதியில் நகை வாங்க செல்கிறீர்களோ அந்த விலையில் தான் அந்த நகையின் மொத்த விலையும் கணக்கிடப்படும். ஆறு மாதம் கழித்து நீங்கள் மொத்தமாக கட்டி முடிக்கும் நேரத்தில் அந்த நகையின் விலை மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் நீங்கள் அந்த அதிகமான தொகையை கட்ட வேண்டியது இல்லை.
நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை நகையில் முதலீடு செய்வதும் ஒரு சிறந்த வழி. இதுபோன்று நீங்கள் முதலீடு செய்யும் பட்சத்தில் உங்களுக்கு பணம் தேவைப்படும் பொழுது உங்கள் நகையை அடகு வைத்தும் கொள்ளலாம். மொத்தமாகவும் நீங்கள் கொடுத்து நகை வாங்கத் தேவையில்லை. முயற்சி செய்து பாருங்கள்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது Sgtamilan.com இணையபக்கத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.