சிங்கப்பூர் நீதிமன்றம்வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!யாருக்கு..??
சிங்கப்பூரில் அண்மையில் சட்ட முறைகளில் இருந்து தப்பிப்பதற்காக நீதிமன்றம் தரும் உத்தரவுகளைப் போலவே போலியான ஆவணங்களைத் தயாரித்து அவற்றை பண பரிமாற்றங்களுக்காக மோசடி செய்து வருகின்றனர்.
மோசடி குறித்த புகார் ஆனது சிங்கப்பூர் நீதிமன்றங்களுக்கு கிடைத்துள்ளதால், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (மார்ச் 17) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
👉🏻கைது செய்வதைத் தடுப்பதற்காக உடனடி செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாக, உடனடியாக பணம் செலுத்துவது போன்ற பயமுறுத்தும் வார்த்தைகளானது நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட மாட்டாது என்றும் சிங்கப்பூர் நீதிமன்றம் கூறியுள்ளது.
👉🏻நீதிமன்ற உத்தரவுகள் குறித்த சந்தேகங்களை “அசல் நீதிமன்ற உத்தரவுகள்” (Authentic Court Orders)என்ற இணையதளத்தின் மூலமாக பொதுமக்கள் சரி பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
👉🏻சந்தேகப்படும்படி அறிவிப்புகள் ஏதேனும் தங்களுக்கு கிடைத்தால், 1799 என்ற எண்ணில் உள்ள ஸ்கேம்ஷீல்ட் (Scamshield) உதவி எண்ணை அழைத்து தங்களது புகார்களை அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது.