சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இந்திய ஆடவர் ..!! காரணம் என்ன..??

சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இந்திய ஆடவர் ..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் பிப்ரவரி 9-ஆம் தேதி அன்று இந்திய ஆடவரான ஆகாஷ் திவாரி (வயது 36)கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிபுரிந்த பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளாார்.

இச்சம்பவம் குறித்து பிப்ரவரி 9 – ஆம் தேதி மாலை 4:27 மணி அளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆகாஷ் விமான பயணத்தின்போது, பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

அவ்வாறு அவர் செய்ததை நிறுத்திக் கொள்ளுமாறு அந்தப் பணிப்பெண் அந்த நபரிடம் கூறிவிட்டு அவரது வேலைகளைப் பார்க்க சென்றுள்ளார்.
ஆனால் அந்த நபர் மேலும் அந்தப் பெண்ணை மறித்து தொல்லை தரும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்த பணிப்பெண் இது குறித்து அவரது மேற்பார்வையாளரிடம் கூறியதை கண்ட ஆகாஷ் அவரது இருக்கைக்கு மீண்டும் சென்றுள்ளார்.

அதன் பிறகு, சாங்கி விமான நிலையம் வந்தடைந்ததும் இந்த செயலுக்காக காவல்துறையினர் ஆகாஷை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் குறித்த விவரங்களைப் பாதுகாப்பு கருதி வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் அல்லது பிரம்படியும் வழங்க வாய்ப்புள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK