குறைந்த விலையில் விமான டிக்கெட் பதிவு செய்வது எப்படி?
தற்பொழுது விமானப்பயணம் என்பது அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாகி விட்டது. ஆனால் பலருக்கும் அதில் பயணம் செய்வதற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்வது எப்படி என்று தெரியாமல் உள்ளது.
நீங்கள் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்பொழுது அதன் விலை மாறிக்கொண்டே இருக்கும். நீங்கள் சரியான முறையில் முன்பதிவு செய்தால் மிகவும் குறைந்த விலையிலேயே விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து விடலாம்.
உங்களுக்கு முன்பதிவு செய்ய தெரியாவிட்டாலும் குறைந்த விலையில் முன்பதிவு செய்ய முடியும். அதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம்.
1,Credit card உங்களிடம் கிரெடிட் கார்ட் இருந்தால் அதில் offer மற்றும் பாயிண்ட்ஸ் இருந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் நீங்கள் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும்பொழுது நீங்கள் அதிகமான சலுகைகளை பெறலாம். அதேபோல் நீங்கள் விமான சீட்டிற்கான பணத்தையும் பொறுமையாக செலுத்தலாம். இது ஒரு சிறந்த வழி.
2.App தற்பொழுது விமான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இதுவும் ஒரு சிறந்த வழி தான். இதிலும் நிறைய சலுகைகள் உள்ளது. ஆனால் இதில் நீங்கள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் பொழுது கண்டிப்பாக உங்களுக்கு எப்படி முன்பதிவு செய்ய வேண்டும் என்ற முறை தெரிந்து இருக்க வேண்டும். இதில் நீங்கள் தவறு செய்தால் அந்த ஆப் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சரி செய்வது சற்று சிரமமாக இருக்கும்.
3. விமான நிறுவனத்தில் முன்பதிவு செய்வது நீங்கள் எந்த விமானத்தில் செல்கிறீர்களோ நேரடியாக அந்த விமானத்தின் இணைய பக்கம் அல்லது அப்ளிகேஷனில் சென்று உங்கள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இப்படி நீங்கள் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது எந்தவித இடைத்தரகரும் இல்லாமல் நேரடியாக உங்கள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஆனால் அப்ளிகேஷன்களிலும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கும் இதைவிட குறைந்த விலையிலேயே விமான டிக்கெட் கிடைக்கிறது.
4.Group Ticket இதுவும் விமான டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான சிறந்த வழி தான். இது பல பேருக்கு தெரிவதில்லை. இதன் மூலம் நீங்கள் விமான டிக்கெட் விலை முன்பதிவு செய்ய ஏர் டிராவல்ஸ் நாட வேண்டும். அவர்களிடம் சென்று நீங்கள் பயணம் செய்ய வேண்டிய தேதியை குறிப்பிட்டு இதில் ஏதாவது குரூப் டிக்கெட் உள்ளதா என்று கேட்டீர்கள் ஆனால் அப்படி இருந்தால் அவர்கள் உங்களுக்கு அதன் விலையை சொல்வார்கள்.
குரூப் டிக்கெட் என்றால் நீங்கள் நிறைய பேர் விமான டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. ஒருவர் மட்டும் கூட இதில் விமான டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம்.
இது எப்படி செயல்படுகிறது என்றால் அந்த ஏர் டிராவல்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட விமானத்தில் பத்திற்கு மேற்பட்ட டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து வைத்துக் கொள்வார்கள். இதை அவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்வதால் அவர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் அந்த டிக்கெட் கிடைக்கும். அதிலிருந்து அவர்கள் குறைந்த லாபத்தை வைத்து உங்களுக்கு அந்த டிக்கெட்டை கொடுக்கும் பட்சத்தில் அன்றைய விமான டிக்கெட்டின் விலையை விட மிகவும் குறைந்த விலையில் உங்களுக்கு டிக்கெட்டை அவர்களால் தர முடியும். அதிலேயே அவர்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கும்.
இது போன்ற குரூப் டிக்கெட்டுகள் உங்களுக்கு வேண்டுமென்றால் பின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளவும் 👇👇👇 Mob: Num: 8754396756