2026 தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் மாபெரும் தொழில்துறை நில திட்டம்..!!

2026 தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் மாபெரும் தொழில்துறை நில திட்டம்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல் பாதியில், அரசு தொழில்துறை நில விற்பனை திட்டத்தின் கீழ் மொத்தமாக சுமார் 11.1 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட எட்டு தொழில்துறை நிலங்களை அரசாங்கம் வெளியிட உள்ளது.

சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,ஆறு இடங்கள் குறுகிய பட்டியலில் இருந்து நேரடியாக விற்பனைக்கு விடப்படும் என்றும், இரண்டு இடங்கள் இருப்புப் பட்டியலில் இருந்து டெவலப்பர்கள் ஆர்வம் காட்டினால் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய பட்டியலில் இடம்பெற்றுள்ள தளங்கள் ஜாலான் புரோ, காக்கி புக்கிட், துவாஸ் அவென்யூஸ் 13 மற்றும் 14, ஜாலான் பெசுட் மற்றும் சின் பீ சாலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.

அதேவேளை, துவாஸ் சாலை மற்றும் பெஞ்சுரு பாதையில் உள்ள இரண்டு தளங்கள், டெவலப்பர்கள் விற்பனைக்கு முன்வந்தால் சந்தைக்கு விடப்படும் இருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான நிலம் தொடர்ந்து போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய,அரசு தொழில்துறை நில விற்பனை திட்டத்தின் மூலம் நில ஒதுக்கீட்டை அரசாங்கம் தொடரும் என அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK