மாணவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் குறைந்தது? ஏன்?

சிங்கப்பூரில் நடந்த ஆசிய எதிர்கால உச்சி மாநாட்டில் முக்கியத்துவம் எதற்கு?

சிங்கப்பூரில் சமீபத்தில் கல்வி அமைச்சகம் ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 42.9% பல்கலைக்கழக மாணவர்கள் இன்ஜினியரிங் துறையை தேர்வு செய்துள்ளனர்.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் அந்த நிலை எதிர்மாறாக மாறியுள்ளது.

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, 22.2% மாணவர்கள் மட்டுமே தற்பொழுது இன்ஜினியரிங் துறையை தேர்வு செய்துள்ளனர்.

இதுகுறித்து கல்வி அமைச்சகம் சமீபத்தில் ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டது.

காரணம் என்ன?
சிங்கப்பூரில் இந்த துறையில் கிடைக்கும் குறைந்த சம்பளமே என மாணவர்கள் கருதுவதாக இந்த ஆய்வு முடிகள் தெரிய வருகிறது.