சிங்கப்பூரில் பொங்கல் திருநாளை முன்னிட்டு எந்த கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்..??

சிங்கப்பூரில் பொங்கல் திருநாளை முன்னிட்டு எந்த கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்..??

தைத்திருநாளான தமிழர் திருநாளை முன்னிட்டு நாளை (14.01.26) காலை முதலே சில கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில்: காலை 6:15 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வு தொடங்கி காலை 7:30 மணிக்கு சிறப்பான தீபாராதனை நடைபெறும்.

ஸ்ரீ மாரியம்மன் கோவில்:
இடம்: South Bridge Road
சிங்கப்பூரில் உள்ள பழமையான கோவிலான ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் காலை 6:00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

மேலும் காலை 6:30 மணிக்கு கால சந்தி பூஜை மற்றும் பொங்கல் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில்:
இடம்: Serangoon Road
சிங்கப்பூரின் மையப்பகுதியில் உள்ள இந்த கோவிலில் விஸ்வரூப தரிசனமானது நாளை (14.01.26) காலை 6:40 மணிக்கு தொடங்கும்.

அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு கால சந்தி பூஜையும் பொங்கல் நெய்வேத்தியமும் நடைபெறும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK