சிங்கப்பூர் NAFA கல்லூரியில் திடீர் தீ..! 50 பேர் வெளியேற்றம்..!
சிங்கப்பூரின் பிரபலமான Nanyang Academy of Fine Arts (NAFA) கல்லூரி வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கட்டிடத்தில் இருந்த சுமார் 50 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பென்கூலன் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள NAFA கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள பணிமனையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி மாலை சுமார் 5.15 மணியளவில் தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிமனையில் இருந்த காற்று சுத்திகரிப்பு சாதனத்தில் தீப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
தீ விபத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிடத்தில் இருந்த சுமார் 50 பேர் வெளியேற்றப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு சிறிய தீப்பொறி கூட பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில், உடனடியாக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ, காயமோ ஏற்படாதது நிம்மதி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.