சிங்கப்பூரில் கோர விபத்து..! 25 வயது இளைஞர் பலி.. 57 வயது பெண் கைது..!!
சிங்கப்பூரின் சிலேத்தார் வெஸ்ட் லிங்க் பகுதியில் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் மோதியதில் 25 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக 57 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாலை சுமார் 6.45 மணியளவில் மத்திய விரைவுச்சாலையை நோக்கிய பகுதியில் கார்–மோட்டார்சைக்கிள் விபத்து ஏற்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
விபத்தில் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 25 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) ஒருவரை செங்காங் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் ஒருவர் லேசான காயங்களுக்கு சிகிச்சை பெற மருத்துவமனை செல்ல மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் தொடர்புடைய காரை ஓட்டிய 57 வயது பெண், மரணம் விளைவிக்கும் அளவுக்கு கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது காவல்துறை விசாரணைக்கு உதவி வருகிறார்.
இதற்கிடையில், விபத்து நடந்த இடத்தைக் காட்டும் காணொளி ஒன்று TikTok தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் துணை மருத்துவர்கள் சம்பவ இடத்தில் இருப்பதையும், அருகில் மோட்டார்சைக்கிள் ஒன்று விழுந்து கிடப்பதையும் காண முடிகிறது
விபத்து தொடர்பான விசாரணையை காவல்துறையினர் தொடர்ந்து நடத்தி வருகிறன்றனர்.
ஒரு நொடியில் நடந்த இந்த விபத்து, ஒரு உயிரைப் பறித்ததுடன், ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது.
சாலையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நம்முடைய உயிரை மட்டுமல்லாமல், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் உயிரையும் தீர்மானிக்கிறது. ஒரு சில விநாடிகளின் கவனக்குறைவு, ஒரு குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத வலியை ஏற்படுத்திவிடும்.
எனவே, சாலையில் செல்லும் ஒவ்வொருவரும் வேகத்தை விட பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, முழு கவனத்துடன் பயணிப்பது அவசியம். ஒரு உயிரை காப்பாற்றும் அளவுக்கு, நமது சிறிய கவனமும் பொறுப்பும் மிகப்பெரியது.