ஒரு சிறிய தவறு… 20 ஆண்டுகள் சிறை செல்லும் நிலை!! எட்டோமிடேட் வழக்கில் அதிர்ச்சி..!!

ஒரு சிறிய தவறு… 20 ஆண்டுகள் சிறை செல்லும் நிலை!! எட்டோமிடேட் வழக்கில் அதிர்ச்சி..!!

சிங்கப்பூர்: எட்டோமிடெட் அடங்கிய மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்களைக் கடத்தியதாக 31 வயது நபர் ஒருவர் மீது கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 12) அன்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு நேற்று(ஆகஸ்ட் 19) மீண்டும் காவல்துறையின் முன் கொண்டுவரப்பட்டு, செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி டான் ஜூன் யுவான் ( குற்றம் சாட்டப்பட்டவர்) ஓட்டி வந்த வாடகைக் கார், டாக்சியுடன் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அவருக்கு உடனடியாக சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பரிசோதனையில், அவரது உடலில் எட்டோமிடேட் மருந்து கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அன்றைய தினம் காலையில் எட்டோமிடேட் கலந்த வேப் கார்ட்ரிட்ஜை பயன்படுத்தியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட 2 மின்னணு சிகரெட்டுகள் மற்றும் 94 கார்ட்ரிட்ஜுகளில், ஒரு மின்னணு சிகரெட்டும் ஒரு கார்ட்ரிட்ஜும் மட்டுமே தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வைத்திருந்ததாக சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) தெரிவித்துள்ளது. மீதம்மிருந்த கார்ட்ரிட்ஜ்கள் அனைத்தையும் மற்றவர்களுக்கு விற்பனை செய்யவும் விநியோகிக்கவும் அவர் காரில் எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து டான் ஜூன் யுவான் ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். ஆகஸ்ட் 19ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த வழக்கு, செப்டம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எட்டோமிடேட் கடத்தல் குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, 1961ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின் (Road Traffic Act) கீழும் போக்குவரத்து காவல்துறையினர் அவரிடம் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரின் புகையிலை மற்றும் மின்னணு சிகரெட் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், எட்டோமிடேட் மனநல பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றச்சாட்டின் தன்மையைப் பொறுத்து 2 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 2 முதல் 5 பிரம்படிகள், அல்லது 3 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 5 முதல் 15 பிரம்படிகள் வரை தண்டனை விதிக்கப்படலாம்.

ஒரு சிறிய தவறாக நினைத்த செயல்… இன்று பல ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி தண்டனையை எதிர்கொள்ளும் நிலைக்கு அவரை கொண்டு சென்றுள்ளது.