மசாஜ் சென்டர் அதிகரிப்பு..!! தஞ்சோங் பகாரில் கிளம்பிய புதிய சர்ச்சை…!!

மசாஜ் சென்டர் அதிகரிப்பு..!! தஞ்சோங் பகாரில் கிளம்பிய புதிய சர்ச்சை...!!

சிங்கப்பூர்: தஞ்சோங் பகார் பிளேஸ் பகுதியில் மசாஜ் மற்றும் அழகு நிலையங்கள் அதிகரித்து வருவதை உள்ளூர் மக்கள், வணிகர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கவலைக்குரியதாகக் கூறுகின்றனர்.

சில கடைகள் முறையான சேவைகளை வழங்கினாலும், சில இடங்களில் சட்டவிரோத சேவைகள் ஊழியர்களின் ஒழுங்கற்ற நடத்தை குறித்த புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக குழந்தைகள் தினமும் இந்நிலையங்களை கடந்து செல்வதால் பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஒரு ஆய்வில், இரண்டு தளங்களில் இயங்கும் குறைந்தது 25 மசாஜ் மற்றும் அழகு நிலையங்கள் கண்டறியப்பட்டன. சில வணிக உரிமையாளர்கள், “மோசமான சில கடைகளால், எங்கள் நற்பெயரும் பாதிக்கப்படுகிறது” எனக் கூறினர்.

10 ஆண்டுகளாக அங்கு வசிக்கும் வாங், “ஒவ்வொரு முறையும் கடந்து செல்லும் போதும் நான் அழைக்கப்படுவேன்.எனவே மாற்றுப் பாதையில் செல்ல வேண்டியுள்ளது” என்றார்.


தஞ்சோங் பகார் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ சியூக் சியோங்,HDB கடை குத்தகைகளை திரும்ப வாங்கி,குடியிருப்பாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மறு வழி நடத்த வேண்டும் என முன்மொழிந்துள்ளார். இதை வரும் நாடாளுமன்ற அமர்விலும் இந்தப் பிரச்சினையை எடுத்துரைப்பதாக தெரிவித்தார்.

சிலர் இதை பெரிய பிரச்சினையாகக் கருதினாலும், மற்ற குடியிருப்பாளர்கள் “அவர்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை.மசாஜ் வேண்டுமா என்று கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்ல முடியும்” என அச்சமின்றி தெரிவித்தனர்.

 

WHATSAPP CHANNEL LINK👉

 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan