இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Blogger ஒருவருக்கு S$6000 அபராதம்...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த blogger ஒருவருக்கு 6000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக ஜூன் 6, வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட தன் மீதான குற்றத்தை அந்த நபர் ஒப்புக்கொண்டார்.
ஆகஸ்ட் 2024 இல் டிக்டாக்கில் 57 வயதான மன்மீத் சிங்,டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் அமைச்சர் ஜோசபின் தியோவின் புண்படுத்தும் கருத்துக்கள் குறித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
சீன வம்சாவளியைச் சேர்ந்த தியோ,அந்தப் பதிவானது மலாய் சமூகத்திற்கு எதிராக கருத்துக்களை கொண்டதாக குற்றம் சாட்டினார்.
பெரும்பாலும் முஸ்லிம்களான மலாய்க்காரர்கள் சிங்கப்பூரின் மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் பேர் உள்ளனர்.
உடனே மன்மீத் சிங் அதே நாளில் அந்த வீடியோவை டிக் டாக் பதிவிலிருந்து நீக்கினார்.
பின்னர் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு மற்றொரு வீடியோவைப் பதிவேற்றினார்.மேலும் அவரது முந்தைய கூற்றுகள் பொய்யாக இருக்கலாம் என்று கூறினார்.
அந்த நேரத்தில், அவரது டிக்டாக் கணக்கில் சுமார் 9,000 பின்தொடர்பவர்கள் இருந்தனர்.
அவர் வெளியிட்ட வீடியோவானது தியோவின் சக ஊழியர்கள் மற்றும் ஒரு நிரூபரின் கவனத்தை ஈர்த்தது.
இதன் விளைவாக அவரது பத்திரிகை செயலாளர் காவல்துறையில் புகார் அளித்தார்.
இதனால் மன்மீத் சிங் பிப்ரவரி 4, 2025 அன்று கைது செய்யப்பட்டு, மறுநாள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மன்மீத் சிங்கின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில்,அவர் தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்டவர் அல்ல என்றும், தனது செயல்களுக்காக அவர் குற்ற உணர்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், அவர் லாபத்திற்காகவோ அல்லது புகழுக்காகவோ வீடியோக்களை உருவாக்குவதில்லை என்றும், சம்பவத்திற்குப் பிறகு அவர் மிகவும் கவனமாக இருந்து வருவதாகவும், அரசியல் தலைப்புகளைத் தவிர்த்து, இடுகையிடுவதற்கு முன்பு ஆதாரங்களைச் சரிபார்ப்பதாகவும் அவர்கள் கூறினர்.
சிங்கப்பூர் சட்டத்தின் கீழ், இன ஒற்றுமையை சீர் குலைக்கும் செயல்களில் ஈடுபடுபவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை,அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
