பிக்ஸியா சாலை நில ஏலம் அறிவிப்பு..!! எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம்..??
பிக்ஸியா சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு நிலத்திற்கான ஏல முடிவுகள் நகர்ப்புற புனரமைப்பு ஆணையம் மூலமாக நேற்று (ஜூன் 16) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த இடமானது 5,513.5 சதுர மீட்டர் பரப்பளவையும், 4.9 என்ற மனை விகிதத்தையும், 27,017 சதுர மீட்டர் மொத்த தரைதள பரப்பளவையும் 99 வருட குத்தகை காலத்தையும் கொண்டுள்ளது அறிக்கையில் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலப் பகுதியானது ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று போது டென்டருக்கு விடப்பட்ட ஜூன் 11 அன்று இந்த நிலத்திற்கான ஏலம் முடிவடைந்துள்ளது. இதற்கு முன்பு அதிகாரிகள் நான்கு ஏலங்களை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிட்டி டெவலப்மெண்ட்ஸ் லிமிடெட் இன் துணை நிறுவனமான சிடிஎல் கான்ஸ்டாலேசன் எஸ்டிஎன். பி எச் டி மற்றும் பெங் பிராப்பர்ட்டிஸ் இன் துணை நிறுவனமான கார்டன் எஸ்டேட் எஸ்டிஎன் டி எச் டி ஆகியவை இணைந்து நியூட்டன் மாவட்டத்தில் இருக்கும் பெக் ஹே சாலையில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு மனைய ஒரு சதுர அடிக்கு சுமார் $1,865 என்ற நிலவிகிதத்துடன் மொத்தமாக $542.4 மில்லியன் என்ற அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.