சிங்கப்பூரில் குடும்ப வன்முறை அதிகரிக்கிறதா..!!புதிய அறிக்கை சொல்வது என்ன..??

சிங்கப்பூரில் குடும்ப வன்முறை அதிகரிக்கிறதா..!!புதிய அறிக்கை சொல்வது என்ன..??

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குடும்ப வன்முறை மற்றும் குழந்தைப் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புதிய அரசு அறிக்கை தெரிவித்துள்ளது. ComLink+ திட்டத்தின் கீழ் உதவி பெறும் குடும்பங்களில், 2024ஆம் ஆண்டில் 16% குடும்பங்கள் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் இது 11% ஆக இருந்தது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, 2024ல் மொத்தம் 1,657 குடும்பங்கள் குடும்ப வன்முறை அல்லது குழந்தைப் பாதுகாப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 685 சம்பவங்கள் அதிகம்.

இந்த அதிகரிப்பு பெரும்பாலும் 2024ல் ComLink+ திட்டத்தில் புதிதாக இணைந்த குடும்பங்களில் காணப்பட்டது. அந்த ஆண்டு சேர்க்கப்பட்ட 2,902 குடும்பங்களில் 17% குடும்பங்கள், அமைச்சு அல்லது சமூகச் சேவை அமைப்புகளுடன் இணைந்து இந்தப் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

இருப்பினும், பெரும்பாலான குடும்பங்கள் பாதுகாப்பாகவே இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. 2024ல் 84% குடும்பங்கள் பாதுகாப்பாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 2023ல் அது 89% ஆக இருந்தது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.